இந்திய அஞ்சல் துறையில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களை கருதி பெண்கள் பயன்பெறும் விதமாக மகளிர் மதிப்பு என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்ய முடியும். இதில் 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படும் நிலையில் இந்த வட்டி காலாண்டுக்கு ஒரு முறை கூட்டு வட்டி விகிதத்தில் கணக்கிடப்படும்.

இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. இது 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் சேர்ந்து ஒரு வருடத்திற்கு பிறகு உங்களின் டெபாசிட் தொகையிலிருந்து 40 சதவீதம் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.