தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவருக்கு வாரிசு திரைப்படத்தின் போது நடிகர் விஜய் ஒரு கிரிக்கெட் பேட்டை பரிசாக கொடுத்திருந்தார். இதேபோன்று தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனியும் நடிகர் யோகி பாபுவுக்கு ஒரு கிரிக்கெட் பேட்டை பரிசாக கொடுத்துள்ளார். அந்த பேட்டில் தோனி தன்னுடைய ஆட்டோகிராபையும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை யோகி பாபு தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு எம்.எஸ் தோனி கைகளில் இருந்தும் அவர் விளையாடிய நெட்டில் இருந்தும் இந்த பேட் நேரடியாக கிடைத்துள்ளது.

இந்த பேட்டை எனக்கு கொடுத்ததற்கு நன்றி சார். உங்கள் கிரிக்கெட் நினைவுகளை போன்று சினிமாவில் நீங்கள் மகிழ்ச்சியுடன் கால் பதிக்கும் இந்த நினைவுகளையும் நான் மகிழ்ச்சியுடன் கூறுவேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் எம் எஸ் தோனி தமிழ் சினிமாவில் Lets Get Married என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.