உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்ஹல் தொகுதி எம்எல்ஏவாக இருந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் அந்த தொகுதியில் தான் வகித்து வந்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மக்களவை எம்பி யாக மட்டும் தொடருவதற்கு அவர் முடிவு செய்துள்ள நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.