
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வயதான மூதாட்டி ஒருவர் பாலித்தீன் பையில் மீனை சமைக்கிறார். பொதுவாக பாலித்தீன் கவர் நெருப்பில் பட்டால் எரிந்துவிடும் என்பது தெரியும். எனினும் அதற்குள் தண்ணீரை ஊற்றி மீனே சமைக்கலாம் என்பது இந்த பாட்டியின் வீடியோவை பார்த்த பிறகுதான் தெரிகிறது.
ஒரு பாலித்தீன் பையில் நீரை நிரப்பி நெருப்பின் மேல் அந்த கவரை தொங்க விடுகிறார். அதனை தொடர்ந்து மீன் சமைப்பதற்கு தேவையான அனைத்து மசாலா பொருட்களையும் அந்த கவருக்குள் போடுகிறார். பின் கடைசியாக மீனையும் எடுத்து பாலித்தீன் கவருக்குள் போட்டு அதை வேக வைக்கிறார். எனினும் நெருப்பின் சூட்டில் அந்த கவர் உருகிவிடவில்லை. இறுதியில் மீன் தண்ணீரில் கொதித்து சுவையான உணவாக மாறுகிறது. இதுகுறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/TopVideosOnly/status/1629483855898877953?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1629483855898877953%7Ctwgr%5E032edb02eb73c905572dd4d5cb4b670a7565e2a4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fviral-video-of-woman-cooking-fish-in-polythene-cover-433982