
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஹம்மாத் கிராமத்தில் தர்மு பெஹரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி பெஹரா என்ற மனைவி இருக்கிறார். இவர் இரண்டாவது மனைவி. இதில் சாந்திக்கு கடந்த 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஹாஸ்பிடலில் இருந்து கடந்த 22 ஆம் தேதி டிஸ்டார்ஜ் ஆன நிலையில் தர்மு தன் மகனை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி பிறந்து 10 நாட்களே ஆன தன் குழந்தையை ஒரு குழந்தை இல்லா தம்பதிக்கு இடைத்தரகர்கள் மூலமாக விற்பனை செய்துள்ளார்.
பின்னர் அந்த பணத்தை வைத்து இஎம்ஐ மூலமாக ஒரு புது பைக் வாங்கிய நிலையில், அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி தர்மு மற்றும் சாந்தி குழந்தைகளை வாங்கிய தம்பதியினரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது உரிய நீதிமன்ற ஆவணங்களின் மூலமாகத்தான் குழந்தையை வாங்கியதாக கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை என்பது தொடர்ந்து நடைபெறுகிறது.