தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை ஏமாற்றிக் கூட்டுப் பாலியல் கொடுமை செய்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் இருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணிற்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவர் மயங்கிய நிலையில் இந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

​வேலை தேடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த அத்துமீறலில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் உறுதியானதைத் தொடர்ந்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகிகள் இருவரையும் போலீஸார் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.