நாமக்கல் மாவட்டம் சாணார்பாளையம் பகுதி சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. கடந்த 28-ஆம் தேதி கிருஷ்ணவேணி உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் இளையாம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு கிருஷ்ணவேணி இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த ஐயப்பனும் அவரது உறவினர்களும் உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஐயப்பன் எனது மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறிய போது மருத்துவர்கள் பதில் அளிக்கவே இல்லை. அதன் பிறகு எனது மனைவி இறந்து விட்டதாக கூறுகின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அப்போது தவறு நடந்திருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்த பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.3`