
மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் அமித் குமார் சென் என்ற 38 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய மனைவி மற்றும் அவருடைய காதலர்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தன்னுடைய புகாரினை கடிதம் மூலமாக எழுதி மாநில முதல்வரிடம் தன் உயிரை காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் மீரட் நகரில் நடந்தது போன்று நீல நீல ட்ரம்ப் பாணியில் என்னையும் கொலை செய்ய என் மனைவி திட்டமிட்டுள்ளார். என் மனைவிக்கு ஒன்று அல்ல மொத்தம் 4 காதலர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். என்னுடைய மகன் ஹர்ஷை கொல்வதற்காக என் மனைவியும் அவருடைய காதலனும் சதி செய்த நிலையில் என்னுடைய இளைய மகனை என் மனைவி அழைத்து சென்று விட்டார். இப்போது என்னை கொலை செய்து விடுவதாக அவர்கள் மிரட்டல் விடுகிறார்கள்.
இது தொடர்பாக நான் பலமுறை போலீசில் புகார் கொடுத்தும் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை நான் புகார் கொடுத்தும் எனக்காக யாரும் வரவில்லை என்பதால் தான் தற்போது நானே வீதிக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். என்னுடைய வேதனையை புரிந்து முதல்வர் தான் இந்த விஷயத்தில் ஒரு நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் முன்னதாக உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகரில் சௌரப் ராஜ்புத் என்பவரை அவருடைய மனைவி முஷ்கான் மற்றும் காதலன் சாகல் ஆகியோர் கொடூரமாக கொலை செய்து உடலை 15 துண்டுகளாக வெட்டி நீல நிற ட்ரம்பில் வைத்து சிமெண்ட் பூசி மறைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.