மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தில்  உள்ள பூர்ணா பகுதியில் ஜெகநாத் ஹெங்டி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தன்னுடைய மகளை படிக்க வைத்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அங்கு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய மகளை வேறொரு பள்ளியில் சேர்க்க திட்டமிட்டுள்ளார்.

இதன் காரணமாக ஜெகநாத் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று தன்னுடைய மகளை வேறு பள்ளியில் சேர்க்க இருக்கிறேன் எனவே செலுத்திய ஸ்கூல் பீஸ் மற்றும் என்னுடைய மகளின் கல்வி சான்றிதழ்களை கொடுங்கள் என அந்த பள்ளியின் தாளாளரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரும் அவரது மனைவியும் கொடுத்த கட்டணத்தை திருப்பி தர முடியாது இன்னும் உங்கள் மகள் நிறைய பணம் செலுத்த வேண்டி இருக்கிறது எனவே அந்த பணத்தையும் கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.

அவர்கள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே திடீரென வாக்குவாதம் ஆக மாறியது. அப்போது விவசாயியை பள்ளி தாளாளரும் அவரது மனைவியும் சேர்ந்து சரமாரியாக அடித்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள நிலையில் விவசாயியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.