
நாகப்பட்டினம் ரயில்வே தண்டவாள பகுதியில் ஒரு சிறுமியின் சடலம் சமீபத்தில் மீட்கப்பட்டது. அந்த சிறுமி குறித்த விவரம் கிடைக்காததால் போலீசார் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடலை அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஜான்சி தம்பதியினர் தங்களது 16 வயது மகளை காணவில்லை என வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீ தான் என்பதை அறிந்த போலீசார் சிறுமியின் உடலை அடக்கம் செய்து விட்டதாக கூறினர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும், உறவினர்களும் தங்களது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர் அந்த சிறுமி ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.