சென்னையில் இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்ததில் சுதக்ஷா என்ற ஐந்து வயது சிறுமி படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் தந்தை ரகு அளித்த பேட்டியில், என் மகள் விளையாடிக் கொண்டிருந்த போது நாய்கள் கடித்து விட்டது. தற்போது அவர் சாகும் நிலைமையில் இருக்கிறாள். சம்பவத்தின் போது நான் ஊரில் இருந்தேன். என்னை மருத்துவமனை உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். என் மகளை நாய் கடிக்கும் போது உரிமையாளர் காப்பாற்றவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.