கன்னட சினிமாவில் கிச்சா சுதீப் நடிப்பில் வெளிவந்த மானிக்யா திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரன்யா ராவ் (32). இவர் பட்டாக்கி என்ற படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வாகா திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகள். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கர்நாடக போலீஸ் வீட்டு வசதி துறை கூடுதல் டிஜிபியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய இரண்டாவது மனைவியின் முதல் கணவரின் மகள் தான் நடிகை ரன்யா ராவ்.

இவர் துபாயில் இருந்து பெங்களூர் வந்த விமானத்தில் தங்க நகைகளை கடத்தி வந்த நிலையில் அதனை அதிகாரிகள் கண்டுபிடித்து அவரை கைது செய்ததோடு 15 கிலோ தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை செய்தனர். அப்போது இரண்டு கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் ரூ‌.2 கோடியே 66 லட்ச ரூபாய் ரொக்க பணம் போன்றவைகள் சிக்கியது. இது பற்றி அவரிடம் விசாரணை நடத்திய போது பலமுறை தங்க கடலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது அவருடைய வளர்ப்பு தந்தை பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறும்போது இந்த சம்பவம் குறித்து செய்திகளில் கேள்விப்பட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த விஷயம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் தெரிந்தவுடன் மற்ற தந்தையை போன்று நானும் அதிர்ச்சி அடைந்தேன். அவள் எங்களுடன் வாழவில்லை. அவருடைய கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அவர்களுக்குள் ஏதாவது குடும்ப பிரச்சனை இருக்கலாம். என்னுடைய கேரியரில் எந்த ஒரு கரும்புள்ளியும் கிடையாது. ‌ சட்டம் தன் கடமையை செய்யும். மேலும் இது பற்றி நான் வேறு எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறினார்.