
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தினசரி வீடுகளுக்கு சென்று வேலை பார்ப்பார். அப்படி வேலைக்கு செல்லும் போதெல்லாம் ஒரு வாலிபர் தொடர்ந்து இளம் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண்ணை பாலியல் இச்சைக்கு இணங்குமாறு வாலிபர் அழைத்த நிலையில் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் அந்த வாலிபர் தொடர்ந்து அந்த இளம் பெண்ணை பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து அத்து மீறினார். இதனால் பாதிக்கப்பட்ட இளம் பெண் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலியல் தொந்தரவு கொடுத்த போபன்னா ராஜேஷ் (35) என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.