
2011-ம் ஆண்டு ஜப்பானை உலுக்கிய பயங்கர சுனாமி பேரிடரில் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் தொலைந்தனர். அந்தப் பேரிடரில் தனது மனைவியை இழந்த யசுவோ தகமாட்சு என்ற நபர், கடந்த 13 ஆண்டுகளாக தனது மனைவியின் உடலை கடலில் டைவிங் செய்து தேடி வருகிறார்.
தனது மனைவியின் உடலை கண்டுபிடித்து, அவருக்கு சரியான இறுதிச் சடங்கை செய்து வைப்பதே தனது ஒரே குறிக்கோள் என்கிறார் யசுவோ. இவ்வாறு ஒருவர் தனது மனைவியை இழந்த துயரத்தில் ஆழ்ந்து, இவ்வளவு ஆண்டுகள் கடலில் மூழ்கித் தேடி வருவது நம்மை உருக வைக்கிறது.
இந்த சம்பவம், மனித உறவுகளின் ஆழம் மற்றும் இழப்பின் வலியை நமக்கு உணர்த்துகிறது. யசுவோவின் இந்த கண்ணீர் நிறைந்த தேடல், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு காதல் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.