
சென்னை மாவட்டம் மாதவரம் சின்ன மருதூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி உமா. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. மணிகண்டன் வெல்டராக வேலை பார்க்கிறார். மணிகண்டன் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரி டிரைவரான ஜெயபிரகாஷ் என்பவரும் நெருங்கிய நண்பர்கள்.
இந்த நிலையில் மணிகண்டன் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டு ஜெயபிரகாஷ் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் ஜெயபிரகாஷின் மனைவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வீட்டிற்கு அருகே உட்கார்ந்திருந்தபோது நண்பர்களுடன் வந்த ஜெயப்பிரகாஷ் மணிகண்டனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயபிரகாஷ் உட்பட மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.