
இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரரும், தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசராக இருந்து வருகிறார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்க முடியாத நிலையில் வீல் சேரில் அமர்ந்து கொண்டு வீரர்களுக்கு ஆலோசனை வழங்கு வருகிறார். இந்த நிலையில் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு அற்புதமான மனிதரை பெற்றிருப்பது பாக்கியம் என்று அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் பாராட்டியுள்ளார். அதாவது ராகுல் டிராவிட் நம்ப முடியாத அசாத்தியமான மனிதர்.
இவரை போன்ற ஒருவரை இந்த காலகட்டத்தில் பெற்றிருப்பது பாக்கியம். இவர் ஒரு அற்புதமான தலைவர் என்று நான் நினைக்கிறேன். அக்கறையுள்ளவர். எப்போதும் அனைவரையும் கவனத்தில் கொண்டிருப்பார். வீரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். கிரிக்கெட்டை பற்றி மட்டுமல்ல மைதானத்திற்கு வெளியே அவர் தன்னை எப்படி நடத்துகிறார் என்பதையும் கற்றுக்கொள்ள நெருக்கமாக பார்ப்பது ஒரு வாய்ப்பு. பல வருடங்களாக இவ்வளவு நேர்மையையும், அமைதியையும் பராமரித்து வருகிறார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.