
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ்தி பகுதியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கீழ் செயல்படும் முத்திரை ஆய்வாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நாகராஜன்(60) என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
வருகிற 30-ஆம் தேதி நாகராஜன் பணி ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் ஓய்வு கால பணபலன்களுக்கான பட்டியல் தயார் செய்து கொடுக்க அதே அலுவலகத்தில் முத்திரை ஆய்வாளராக வேலை பார்க்கும் தமிழ்ச்செல்வன்(50) என்பவர் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறிப்பு நாகராஜன் லஞ்ச ஒழிப்பு போலீஸ் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நாகராஜன் தமிழ்ச்செல்வனிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழ்ச்செல்வனை கையும் களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஅல்லது.