தெலுங்கானா மாநிலத்தில் நிசாமாபாத் என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் நஷ்டியா என்ற பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. நிச்சயதார்த்த விழாவில் மணமகள் வீட்டார் சார்பாக விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விருந்தில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. விருந்தியில் மணமகன் குடும்பத்தினர் கூறி இருந்த நல்லி எலும்பு கறி இடம்பெறவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மணமகன் குடும்பத்தினர் பெண் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது நல்லி எலும்பு கறி வைக்காமல் பெண் வீட்டார் தங்களை அவமதித்து விட்டதாக கூறி மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.