
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஜார்ஜா என்ற கிராமத்தில் வசித்து வந்த 16 வயது சிறுவனுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக 15 வயது சிறுவன் தொடர்பு கொண்டு பழகியுள்ளான். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வந்த நிலையில் 16 வயது சிறுவனுக்கு ஒன்றரை வருடங்களாக ஒரு சிறுமியுடன் நட்பு இருந்துள்ளது. இந்த நிலையில் அந்த சிறுமி சிறுவனின் 15 வயது நண்பனுடன் கடந்த சில நாட்களாக பேசியுள்ளார். இதனால் அந்த சிறுவன் காதலை வளர்க்க தொடங்கியுள்ளான்.
இதனிடையே தன்னுடைய நண்பன் காதலியுடன் பேசுவது பற்றி அறிந்ததும் 15 வயது சிறுவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் நண்பனை கொலை செய்வது என்று அந்த சிறுவன் முடிவு செய்து கடந்த செவ்வாய்க்கிழமை கடைக்கு சென்று கத்தி ஒன்றை வாங்கியுள்ளான். மறுநாள் பீர் குடிக்க வரும்படி நண்பனை தனியாக அழைத்துச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுவனை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.