தன்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பாஜகவிடம் வசதி கிடையாது என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் உலா வந்தது. இதற்கு X பக்கத்தில் பதிலளித்துள்ள அவர், தன்னை விலைக்கு வாங்க முயற்சித்தால் அது அவர்களால் முடியாது என்பதை உணர்வார்கள் எனக் கூறியுள்ளார். பிரகாஷ் ராஜின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது