உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த பெண்ணுக்கு பெற்றோர் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். வருகிற மார்ச் மாதம் இளம் பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதனை அறிந்த இளம்பெண்ணின் முன்னாள் காதலன் வேலைக்கு சென்று இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி பேசினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் இளம்பெண் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வாலிபரும் காயமடைந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்துல வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.