
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கொடைக்கானலில் ஜனநாயகன் படத்தின் சூட்டிங் முடிவடைந்த பிறகு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார். நடிகர் விஜய் சென்னைக்கு திரும்பும் போது மதுரை ஏர்போர்ட்டில் வைத்து ஒரு ரசிகர் சால்வை அணிவதற்காக ஓடி வந்தார். அப்போது விஜயின் பாதுகாவலர்கள் விஜயை தாக்கத்தான் வருகிறார் என்று நினைத்து அவரை பிடித்து தலையில் துப்பாக்கியை வைத்தனர்.
பின்னர் அவரை தரதரவென அங்கிருந்து இழுத்துச் சென்ற நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து அந்த ரசிகர் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது, தலையில் துப்பாக்கி வைத்தது தற்செயலாக நடந்தது. நான் வீட்டிற்கு வந்த பிறகு தான் அதைப் பற்றி கேள்விப்பட்டேன். நாங்கள் அனைவருமே விஜயின் பாதுகாப்புக்காக தான் செயல்படுகிறோம். எனவே என் தலையில் துப்பாக்கி வைத்ததில் எந்த தவறும் கிடையாது.
இதுவரை எங்கள் தலைவரின் பாதுகாப்புக்காக நாங்கள் செல்லும் நிலையில் கைகளால் அவர்களை தடுப்போம். ஆனால் தற்போது துப்பாக்கியை வைத்து தடுக்கிறார்கள். அது எங்களுக்கு மிகவும் சந்தோஷம்தான். மேலும் என்னை துப்பாக்கியால் சுட்டால் கூட என் தளபதிக்காக அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்றார்.