
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய் தனது அரசியல் கொள்கைகள் குறித்தும் மக்கள் நலன் குறித்தும் தனது கோட்பாடுகள் என்ன என்பதை விளக்கமாக பேசினார். மேலும் தன்னை கூத்தாடி என்ற விமர்சிப்பவர்களுக்கு விஜய் பதிலளித்துள்ளார். திராவிடம் வளர்ந்ததே கூத்தை வைத்து தான்.
தமிழகத்தில் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த போதும் ஆந்திராவில் என்.டி.ஆர் அரசியலுக்கு வந்த போது கூத்தாடி என விமர்சித்தனர். அவர்கள் விமர்சனத்தை தாண்டி பெரும் தலைவர்களாக உருவானார்கள். கூத்தாடி என்றால் கேவலமான சொல்லா என்று கேள்வி எழுப்பினார். மேலும் கூத்து என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஆதி வடிவம் தான். நான் உழைத்து முன்னேறிய கூத்தாடி என கூறினார். அவரது பேச்சைக் கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.