
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவருக்கு கடந்த 2017 ம் ஆண்டு நடிகை சமந்தாவுடன் திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து 4 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், 2021 ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதன் புகைப்படத்தை நாகார்ஜுனா வெளியிட்டார். இதைத்தொடர்ந்து சமந்தாவின் ரசிகரான ஒருவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் ப்ளீஸ் என்று கூறியுள்ளார். அதற்கு சமந்தா அந்த வீடியோவில் உள்ள உடற்பயிற்சி கூடம் என்னை கிட்டத்தட்ட சம்மதிக்க வைக்கிறது என்று அவர் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.