திருநெல்வேலி மாவட்டம் மேட்டு பிராஞ்சேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுடலைமணி(57) சமுத்திரகனி(47) தம்பதியினர். இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமுத்திரகனி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த சுடலைமணி சமுத்திரகனியை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

பின்பு அவரை தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து சமுத்திரக்கனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சுடலைமணியிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்பு போலீசார் சுடலைமணியை கைது செய்தனர்.