
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கம்பெனிபாக் பகுதியில், திருமணமான பெண்ணுடன் உறவு வைத்து வந்த ஒரு இளைஞன், கிராம மக்களின் அழுத்தத்தால், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய நேரிட்ட பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. நிஷா என்ற மூன்று குழந்தைகளின் தாய், தனது கணவனை விட்டு குந்தன் என்ற இளைஞருடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பழகி வந்தார். இந்த கள்ளக்காதல் வெளியே தெரிந்ததால், நிஷாவை அவரது கணவன் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். பின்னர், நிஷா குந்தனுடன் வாழத் தொடங்கினார்.
இந்த நிலையில், நிஷா குந்தனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார். ஆனால், குந்தன் திருமணத்தில் ஆர்வம் இல்லாமல், பாகல்பூருக்குத் சென்றுவிட்டார். பின்னர் நிஷா பாகல்பூருக்கே சென்று தினமும் அவரது வீட்டில் வைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். கடந்த சில நாட்களாகவே நிஷா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு நிலையில் இறுதியாக புதன்கிழமை இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் இருவரையும் பிடித்து கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்தனர்.
திருமண நேரத்தில் கூட, குந்தன் திருமணத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினார். “அவள் எனக்கு ஐந்து வயது பெரியவள். மூன்று பிள்ளைகளுக்குத் தாய். அவளுடன் எனக்கு உண்மையான காதல் இல்லை. சாப்பிடவும், தங்கவும் என்பதற்காகவே நான் அவளுடன் இருந்தேன்” என்று கூறினார். இதனால் அந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி, கிராமமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.