ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் 30 வருடங்களாக கெட்டுப் போகாமல் இருப்பதாக வெளியான செய்தி இணையதளங்களில் பேசும் பொருளாகியுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கேசிடீன், எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர்கள் அமெரிக்காவில் உள்ள பிரபல மெக்டொனால்டு உணவகத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஒரு பர்கரை வாங்கியுள்ளனர். அப்போது அமெரிக்க அதிபராக பில் க்ளிண்டன் இருந்துள்ளார்.

இந்நிலையில் பர்கர் வாங்கப்பட்டு  தற்போது 30 வருடங்கள் ஆகும் நிலையில் அந்த இளைஞர்கள் இதுவரை அது கெட்டுப்போகாமல் இருப்பதாகவும் அதிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் பர்கரை அப்படியே வைத்தால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அப்படியே சுமார் 30 வருடங்கள் வரை வைத்து விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.