சிஎஸ்கே அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது, நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா அதிக முறை டக் அவுட்(18) ஆகி மோசமான சாதனையை படைத்தார். பிறகு  பீல்டிங் செய்ய களத்திற்கு வரவே இல்லை. தொடர்ந்து அவரை இம்பேக்ட்  பிளேயராக மட்டுமே மும்பை அணி நிர்வாகம் பயன்படுத்தியது .கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டியில் களமிறங்கவில்லை.

இதனால் பொறுப்பு கேப்டனாக சூரியகுமார் யாதவ் இருந்தார். இந்த சமயத்தில் அவருக்கு உதவியாக ரோகித் சர்மா இருப்பார் என்று பார்க்கப்பட்டது.  முன்னதாக  கடந்த சீசனில் மும்பை இரண்டு பிரிவுகளாக செயல்பட்டது. இந்திய வீரர்கள் ரோகித் சர்மாவுக்கு கீழும், வெளிநாட்டு வீரர்கள் ஹர்திக் பாண்டியாவின் கீழ் செயல் பட்டு வந்தார்கள். இதனால் கடந்த சீசனின் பாதியிலும் ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தப்பட்டார் .இந்நிலையில் தற்போதும் அதுவே தொடர்கிறது.