
இந்தியாவின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக 108 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி 206 விக்கெட் கைப்பற்றியிருக்கிறார். இதேபோல 64 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி 229 விக்கெட்டுகளையும், 25 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். தொடர்ந்து இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். இவருடைய சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் .
இவருடைய சகோதரி சபீனா. இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்துள்ளார். இவரும் இவருடைய கணவரும் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிந்து 2021, 24 ஆம் வருடம் வரை இந்த திட்டத்தில் சம்பளம் பெற்று வந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கிறது. ஆனால் தற்போது என்ன பணியாற்றுகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்டக்காரர் உடைய சகோதரி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய விபரங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.