‘லியோ’ படத்தின் முதல் நாள் காட்சியின் டிக்கெட் விலையை கண்டு விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படம், வரும் அக்.19 தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கான புரோமோஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு IMAX திரையரங்கில் FDFS டிக்கெட் ரூ. 2,500க்கு விற்கப்படுவதாக இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.