இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுயேந்திர சாஹல் கடந்த 2020 ஆம் வருடம் தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த இவர் அடுத்தடுத்து  பாடகியாகவும் அறிமுகமானார். தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்ததை அடுத்து இருவரும் விவகாரம் செய்ய போவதாக தகவல் வெளியானது. ஆனால் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பல சமயங்களில் பேசி வந்தார். ஆனால் 2023 ஆம் வருடம் சாஹலின் பெயரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கியிருந்தார். ஆனால் விவகாரத்தை குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பாக இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விவகாரத்தை பெற்று விட்டார்கள்.  இந்த நிலையில் முன்னாள் மனைவி தனஸ்ரீ தர்மாவுக்கு 4.75 கோடியை கிரிக்கெட் வீரர் சாஹல் ஜீவனாம்சமாக வழங்க இருக்கிறார். இதில் 2.37 கோடி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்றத்திற்கு வருகை தந்த சாஹல்””Be Your Own Sugar Daddy” என்ற வாசகம் பொருந்திய டி-ஷர்ட் அணிந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலியல் உறவு, நட்பு போன்றவர்களுக்கு ஈடாக பெண் ஒருவருக்கு பணம், பரிசுகள் கொண்டாட்டம் வழங்கும் வயதான பணக்கார ஆனை தான் சுகர் டாடி என்று குறிப்பிடுகிறார்கள்.