தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கி நேற்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துவிட்டது. நடிகர் விஜய் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் களம் காண்கிறார். நேற்று முதல் வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு கொள்கை தலைவர்களின் திருவுருவ சிலைகளை பனையூர் அலுவலகத்தில் விஜய் திறந்து வைத்தார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து கண்டிப்பாக அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று  மீண்டும் தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சியின் நிலைநாட்டுவோம் என்று கூறி வருகிறார். ஆனால் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் சாத்தியமானது கிடையாது என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை நடிகர் விஜய் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் அது பற்றி செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் 2 ஆண்டு குழந்தை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறினார். நடிகர் விஜயை அவர் குழந்தை என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது அரசியல் கட்சி தொடங்கி 2 வருடங்களில் போட்டியிட இருப்பதால் இரண்டு வருடங்களே ஆன குழந்தை என்ற விதத்தில் அவர் கூறியுள்ளார்.

மேலும் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்க தயார் என்று அதிமுக தலைவர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.