சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, ஒரு திருமண விழாவில் நூடுல்ஸ் ஸ்டால் திறக்கப்பட்டவுடன் மக்கள் அதனை சுற்றி நிற்கும் காட்சியைக் காட்டுகிறது.

விருந்தினர்கள் தட்டுகளை எடுத்து, வேகமாக நூடுல்சை நிரப்பிக் கொண்டனர். பரிமாற வந்தவர்கள் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது. இந்தக் காட்சியை நேரில் பார்த்த ஒருவர் தனது கைபேசியில் படம் பிடித்து பகிர்ந்ததுதான் இப்போது வைரலாகி இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by SarcasmicBhai 🔥 – Raghav Behl (@sarcasmicbhaii)

இந்த வீடியோவில், உணவுக்காக மக்கள் எவ்வளவு ஆவலாக இருக்கின்றனர் என்பதைக் காண முடிகிறது. நூடுல்ஸ்  ஸ்டால் திறந்ததும் விருந்தினர்கள் ஒரே நேரத்தில் வந்து மொத்தத்தையும் எடுத்து சென்றனர். அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல உணவுப் பண்டங்கள் இருந்தும், நூடுல்ஸ் ஸ்டாலில் மக்கள் குவிந்தது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @sarcasmicbhaii என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை மில்லியனுக்கும் மேற்பட்டோர் இதைப் பார்த்துள்ளனர்.