தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் ஆலியா மானசா. இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. முதலில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் அறிமுகமானார். அந்த சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த சஞ்சீவி காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது ஆலியா மானசா சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று தனது 28 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

alya_manasa இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@alya_manasa)