இன்றைய காலகட்டத்தில் மோசடி என்பது திரும்பும் பக்கம் எல்லாம் நடைபெறுகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தற்போது மும்பை குர்லாவில் உள்ள பெட்ரோல் பங்கில் புதிய வகை மோசடி நடந்துள்ளது. அதாவது ஒரு வாகன ஓட்டி ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி உள்ளார். அதில் பாதிக்கு மேல் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது.

இது குறித்த வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாட்டிலின் மேல் பகுதியில் பெட்ரோலும் கீழே தண்ணீரும் இருந்ததை கண்ட வாடிக்கையாளர் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இந்த பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.