தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் வலம் வந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழ்நாடு முதலமைச்சர்களாக இருந்த எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். இந்நிலையில் இவரது நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இதற்குரிய ஏற்பாடுகளை அவரது மகன் நடிகர் பாலகிருஷ்ணா செய்து வருகிறார். 300-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் என்.டி.ஆர், 3 முறை தேசிய விருதுகளைப் பெற்றதோடு, தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கினார். என்டிஆரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கிறார்.