ஐபிஎல் 18 வது சீசன் ஆனது வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத இருக்கின்றன. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடர் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூர் அணி 17 வருடங்களாக ஐபிஎல் கோப்பையை ஜெயிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்த அணியின் வீரர்  டிவிலியர்ஸ் ‘ஈ சாலா கப் நமதே’ என்ற வார்த்தையை கூறி ஆர்சிபி கோப்பை வெல்லும் என்றும் சொல்வார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய டிவிலியர்ஸ், “நான் அந்த வார்த்தையை ஏதோ ஒரு நாளில் சொல்லும்போது விராட் கோலி என்னிடம், தயவுசெய்து இப்போது அதை சொல்வதை நிறுத்துங்கள் என்று கூறினார். அதனால் நான் கொஞ்சம் சிக்கலில் மாட்டிக் கொண்டேன். இந்த சீசனில் கோப்பை வருகிறது என்று எப்போதும் சொல்லி சோர்வடைந்து விட்டேன். நண்பர்களே இது ஐபிஎல் உலக கோப்பையை வெல்லக்கூடிய 10 உலக தரம் வாய்ந்த அணிகள் இருக்கின்றன.  இதை வெல்வது என்பது கடினமான போட்டி. எனவே இந்த பதினெட்டாவது சீசனில் ஆர்சிபி கோப்பை வென்றால் விராட் கோலியோடு நான் அதை ஏந்துவதற்கு தயாராக இருப்பேன்” என்று கூறியுள்ளார்.