பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் பாலா. இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் பாலா தன்னால் இயன்ற உதவிகளை பலருக்கும் செய்து வருகிறார். குறிப்பாக மலைவாழ் கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்கி உதவினார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியின் ஆண்டு விழாவில் நடிகர் பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் ராகவா லாரன்ஸின் மாற்றம் அமைப்பில் நானும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வருகின்ற காலங்களில் மாற்றம் அமைப்பில் என்னுடைய பங்களிப்பும் அதிகமாக இருக்கும். நான் கேட்டபோது எனக்கு யாரும் உதவி செய்யவில்லை. எனவே என்னிடம் உதவி கேட்கும் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. மேலும் வாழ்க்கை முழுவதும் உதவிகள் செய்ய வேண்டும் என்ற ஆசை நிறைய இருக்கிறது என்று கூறினார்..