சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி கலைஞர் கண்ணுக்கு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த டாக்டர் பாலாஜி விக்னேஷ் என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்னேஷ் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் போலீசருக்கு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, என் பெயர் விக்னேஷ். நான் புதிய பெருங்களத்தூரில் வசித்து வருகிறேன். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்து இருக்கிறேன். எனது அம்மா பிரேமா நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். என் அம்மாவுக்கு சபிதா மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வந்தோம்.

அதன் பிறகு கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை நன்றாக இருக்கும் என கேள்வி பட்டு கடந்த மே மாதத்திலிருந்து இங்கு காட்டி வருகிறோம். டாக்டர் பாலாஜி தான் என் அம்மாவுக்கு சிகிச்சை அளித்தார். என் அம்மா அவ்வப்போது வலி தாங்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அக்டோபர் கடைசியில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு கூட்டி சென்றேன். அங்கே டாக்டர் ஜான் மைக்கேல் என் அம்மாவை பரிசோதனை செய்துவிட்டு இதற்கு முன்னாடி எங்கே ட்ரீட்மென்ட் எடுத்தீங்க என கேட்டார்.

நான் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தோம் என கூறினேன். அதற்கு டாக்டர் உங்க அம்மாவுக்கு மெடிசன் சைடு எஃபெக்ட் ஆகி இருக்கு என்று கூறினார். நான் உடனே கிண்டி மருத்துவமனைக்கு சென்று டாக்டர் பாலாஜியிடம் என்ன சார் எங்க அம்மாவுக்கு மருந்து ஏதோ சைட் எஃபெக்ட் ஆகி இருக்காமே என கேட்டேன். அவர் சரியாக பதில் சொல்லாமல் என்னை எச்சரித்து அனுப்பினார். இதனால் நான் அழுது கொண்டே வெளியே வந்து விட்டேன். இன்று காலை என் அம்மா கடுமையான வலியால் அவதிப்பட்டார்.

அதனை என்னால் பார்க்க முடியவில்லை. காரணம் டாக்டர் பாலாஜி தானே என கோபப்பட்டு வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு போனேன். டாக்டர் பாலாஜி ரூமுக்கு சென்று கதவை அடைத்து, எங்க அம்மாவுக்கு என்னய்யா மருந்து கொடுத்த அப்படின்னு கேட்டு அவர் வாயிலேயே குத்தினேன். கோபம் தாங்காமல் கத்தியால் அவரை பல்வேறு இடங்களில் குத்தினேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் எனக்கு என்ன வேண்டுமானாலும் தண்டனை கொடுங்கள் சார்; ஆனா எங்க அம்மாவுக்கு நல்ல சிகிச்சை கொடுக்க சொல்லுங்க சார் என்ன விக்னேஷ் கதறி அழுவதாக போலீசார் கூறியுள்ளனர்.