பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விராட் கோலியுடன் தனது முதல் சந்திப்பை நினைவு கூர்ந்தார். முன்னாள் இந்திய கேப்டனின் அறிவுரைகள் அவரது வாழ்க்கையில் நிறைய உதவியது என்று கூறினார். 

2022 ஆம் ஆண்டில் விராட் கோலி தன்னை “டாப்” பேட்டர் என்று அழைத்தது “மிகவும் பெருமையான” தருணம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார். 2022 ஆம் ஆண்டில், விளையாட்டில் புதிய நிலைகளை எட்டிய போதிலும், பாபர் தனது அணுகுமுறையையும் மரியாதையையும் மாற்றவில்லை என்று கோலி பாராட்டினார். அத்தகைய வீரர்கள் நீண்ட தூரம் சென்று நிறைய பேருக்கு உத்வேகம் தருகிறார்கள் என்றார்.

அதாவது கடந்த ஆண்டு, மான்செஸ்டரில் நாங்கள் (பாபர்,கோலி) சந்தித்தபோது, ​​பாபர் என் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதைக் கண்டேன் என்று விராட் கோலி கூறியிருந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் பாபரின் அபரிமிதமான வளர்ச்சியை தான் பின்பற்றி வருவதாகவும், வடிவங்களில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவரை அழைத்ததாகவும் கோலி கூறினார்.

“யாராவது உங்களைப் பற்றி இதுபோன்ற கருத்துக்களை அனுப்பும்போது அது மிகவும் நன்றாக இருக்கிறது” என்று பாபர் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் ஒரு வீடியோவில் கூறினார், அதன் கிளிப் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.அதில், “என்னைப் பற்றிய விராட் கோலியின் கருத்துக்கள், அது எனக்கு மிகவும் பெருமையான தருணம், அது மிகவும் நன்றாக இருந்தது. விராட் கோலி போன்ற சிறந்த வீரரின் சில விஷயங்களும் சில பாராட்டு வார்தைகளும் உங்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன.”

யாராவது உங்களைப் பற்றி உயர்வாகப் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று பாபர் அசாம் கூறினார். என்னைப் பற்றி விராட் கோலி கூறிய கருத்து எனக்கு பெருமை அளிக்கிறது. விராட் போன்ற ஒருவர் உங்களைப் புகழ்ந்தால், அது உங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது. 2019 உலகக் கோப்பையின் போது நான் அவரை அணுகினேன். அப்போது அவர் உச்சத்தில் இருந்தார். இப்போதும் அவர் உச்சத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில், நான் அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.

அப்போது எனது விளையாட்டுக்கு தேவையான பல கேள்விகளை அவரிடம் கேட்டேன். அதற்கு பதில்கள் தேவைப்பட்டன, அவர் எனக்கு நன்றாக புரிய வைக்க முயன்றார். மிக அழகாக விளக்கினார். இது எனக்கு மிகவும் உதவியது. அது நன்றாக இருக்கிறது.” என்றார்.

செப்டம்பர் 2 ஆம் தேதி பல்லேகலேயில் நடைபெறும் ஆசிய கோப்பை குரூப் ஏ இன் முதல் ஆட்டத்தில் பாபரும் விராட்டும் இப்போது ஒருவரையொருவர் எதிர்கொள்வார்கள்.பாகிஸ்தான் அணி நேபாளத்திற்கு எதிரான முதல் போட்டியில் விளையாடியது, இதில் பாபர் அசாம் 151 ரன்கள் எடுத்ததன் மூலம் பாகிஸ்தான் அணி  6 விக்கெட்டுக்கு 342 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய  நேபாள அணியால் 104 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.