
திருநெல்வேலி மாவட்டம் டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஜங்ஷன் மீனாட்சிபுரத்தில் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாளை மருதூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவர் திருமணத்திற்கு பெண் பார்த்து தருமாறு பதிவு செய்து அதற்கான பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால் நீண்ட நாட்களாகியும் அவருக்கு திருமணம் நடைபெறாமலேயே இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரத்தினவேல் நேற்று விஜயகுமாரின் அலுவலகத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரிவாளால் விஜயகுமாரின் தலை மற்றும் காலில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்து அலறி துடித்த விஜயகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ரத்தினவேல் நேரடியாக காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.