நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவலா  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது என்றே சொல்லாம். ஏனெனில் தமன்னாவின் குத்தாட்டம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு எப்போதும் பிரச்சனைதான் என   தெரிவித்தார். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், நான் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நீக்க நீண்ட காலத்திற்கு முன்பே கேட்டேன். அப்போது, சிலர் ரஜினி பயந்து விட்டார் எனக் கூறியதாகக் குறிப்பிட்டார். ரஜினியின் இந்த பேச்சு சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.