
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவலாளி அஜித் குமார் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 21 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு நிகிதாவே தெரியும்.
அவர் நான்கு திருமணங்கள் செய்து யாருடனும் வாழ வில்லை. எனக்கும் நிகிதாக்கும் திருமணம் நடந்தது உண்மைதான். ஆனால் அன்று இரவே பால்பழம் சாப்பிடும் சென்றபோது நிகிதா ஓடிவிட்டார். எனக்கு முன்னாலேயே நிகிதாவுக்கு மூன்று பேருடன் திருமணம் நடைபெற்றது.
மாப்பிள்ளை வீட்டில் திருமணத்திற்கு கோடி கணக்கில் செலவு செய்வார்கள். அன்றைய காலகட்டத்தில் இருந்து நிகிதா குடும்பத்தில் திருமணம் என்றாலே 10 பேருக்கு மேல் வர மாட்டார்கள். 15 நாளில் அவசர அவசரமாக எல்லா ஏற்பாடையும் செய்வார்கள்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையது நிகிதா தான் என தெரிந்திருந்தால் முதலிலேயே நான் வந்திருப்பேன். பொதுவாக நிகிதாவும் அவரது குடும்பத்தினரும் திருமணம் செய்த அன்றே மாப்பிள்ளை குடும்பத்தினரை ஏமாற்றி விடுவார்கள்.
தொடர்ந்து வரதட்சனை புகார் அளித்து பணம் பறிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர். நிகிதா பல மோசடிகளில் ஈடுபட்டவர். அது பற்றி ஆய்வு செய்யாமல் அஜித்குமாரை தாக்கியது தண்டனைக்குரிய குற்றம்.
அஜித் குமாருடன் ஏற்பட்ட ஈகோ பிரச்சனையில் தான் நிகிதா அவரை சிக்க வைத்திருக்க வேண்டும். அவரது தந்தை சப் கலெக்டர் .தாய் அரசு ஊழியர். அவர்கள் பலபேரை ஏமாற்றியுள்ளனர். இந்த வழக்கில் நிகிதாவையும் அவரது தாய் சிவகாமியையும் சேர்க்க வேண்டும் என திருமாறன் கூறியுள்ளார் .