தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சி கொடியினை சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அவர் கட்சி கொடியில் யானை சின்னம் இருப்பதால் ஒருவர் அதனை நீக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி யானை எங்கள் சின்னம் என்பதால் தேர்தல் விதிமுறைகளின் படி அதனை நீங்கள் வைக்கக் கூடாது என்று கூறினார். அவர் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி வைத்ததிலிருந்து தொடர் சர்ச்சைகள் எழும் நிலையில் இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, யானை என்பது ஒரு தனி மனிதனுக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு மாநிலத்திற்கோ சொந்தம் கிடையாது. ஸ்பெயினில் மட்டும்தான் யானை இருக்கிறதா.? எங்கள் ஊரில் இல்லையா. என் தம்பிக்கு யானையை வைத்துக்கொள்ள எல்லா உரிமையும் இருக்கிறது என்றார். அதன் பிறகு எனக்காக பேசுவதற்கு யாருமே இல்லை என்று வேதனையுடன் சீமான் கூறினார். மேலும் என் தம்பி விஜய்க்கு என்ன பிரச்சனை வந்தாலும் அவருக்காக குரல் கொடுக்க அண்ணன் நான் இருக்கிறேன் என்று கூறினார்.