
தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இந்நிலையில் தாராபுரம் அருகே கடந்த 8-ம் தேதி அமராவதி ஆற்றில் மூழ்கி பத்தாம் வகுப்பு படித்து வந்த காவியா என்ற மாணவி உயிரிழந்தார். இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில் இந்த மாணவி 500-க்கு 349 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் மாணவி உயிரிழந்ததை நினைத்து பெற்றோர்கள் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார்கள்.