தமிழக சட்டமன்றத்திலும் வெளியிலும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் தோல்விகளை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து, எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தற்போதைய ஆளுங்கட்சியின் “சோஃபா மாடல்” அரசின் போலி பிம்பமானது மக்கள் மத்தியில் முற்றிலும் அடித்து, துவைக்கப்பட்டு, நொறுங்கிக் கிடப்பதாக அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.

சட்டமன்றத்தில் நம்மைக் கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு, முதலமைச்சர் விஜய் அடுக்கடுக்கான பொய்களைப் பேசி, தற்போதைய சூழ்நிலையில் அவரை அவரே ஒட்டுமொத்தமாக எக்ஸ்போஸ் செய்து கொள்கிறார் என்றும் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான தொனியில் கிண்டலடித்துள்ளார். தங்களை ஒரு “தூய சக்தி” என்று பறைசாற்றிக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், நாற்காலியில் அமர்ந்த அடுத்த நிமிடமே குதிரை பேரத்தைத் தொடங்கி தங்களது சுயரூபத்தைக் காட்டிவிட்டார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

​மேலும், தமிழ்நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய முதலமைச்சர் விஜய்க்கு அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் விவசாயிகளை, திமுகவின் தூண்டுதலால் தான் அவர்கள் போராடுகிறார்கள் என்று கூறி முதலமைச்சர் கொச்சைப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் அரசுக்குத் தமிழ்நாட்டில் எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும், அதற்குத் தங்களது நிர்வாகத் திறமையின்மையை மறைப்பதற்காக “எதற்கெடுத்தாலும் திமுகதான் காரணம்” என்ற ஒரு ரெடிமேட் பதிலை முதலமைச்சர் விஜய் எப்போதுமே கையில் வைத்திருக்கிறார் என்று உதயநிதி ஸ்டாலின் துவம்சம் செய்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சிக்கு எதிராகத் தொடுத்துள்ள இந்த அசுர வேக அரசியல் அஸ்திரம், கோட்டை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி சோசியல் மீடியாவிலும் தீயாய் பரவி வருகிறது.