ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுகவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
குறிப்பாக, அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் பிச்சை, எம். முத்துராமன் மற்றும் நகர அம்மா பேரவைத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் இந்த அணி மாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர் ராஜாவின் தீவிர முயற்சியால் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், இது மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
