தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தனது கட்சியைப் பலப்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 7, 2026), அதிமுகவின் முன்னாள் மாவட்டச் செயலாளரான வி.எஸ்.பாபு அதிகாரப்பூர்வமாகத் தவெகவில் இணைந்தார். இணைந்த கையோடு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

“எடப்பாடி பழனிசாமிக்கு தலைமை தாங்கும் ஆளுமையே இல்லை. அதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் எனக்கு துளியும் பிடிக்கவில்லை” என்று அவர் வெளிப்படையாகப் பேசினார். ​மேலும் பேசிய வி.எஸ்.பாபு, அதிமுகவில் தனக்குச் சரியான ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்றும், தகுதியானவர்களுக்கு அங்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.