
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கபூர். இவர் தனது நண்பர்கள் ஏழு பேருடன் காரில் காரைக்காலுக்கு சுற்றுலா வந்துள்ளார். காரில் பாட்டை போட்டுவிட்டு கடற்கரையில் நண்பர்கள் இணைந்து நடனமாடியுள்ளனர். அப்போது போலீசார் வந்து கண்டித்ததால் அவர்கள் அங்கிருந்து கலைந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசாரின் அறிவுரையை கண்டு கொள்ளாமல் கடற்கரை முகத்துவாரத்தில் நின்று கொண்டு அப்துல் கபூர் ரீல்ஸ் எடுத்துள்ளார்.
அப்போது ராட்ச அலையில் சிக்கி அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ஷ்ட அடைந்த நண்பர்கள் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அப்துல் கபூரை தேடிப் பார்த்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அப்துல் கபூர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.