இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் போஸ்ட் ஆபீஸ் பெயரில் வரும் மோசடி செய்திகளை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில், உங்களுடைய பேக்கேஜ் வேர் ஹவுசில் இருக்கிறது. நாங்கள் இரு முறை முயற்சித்து முகவரி தகவல் கிடைக்காததால் டெலிவரி செய்ய முடியவில்லை. உங்கள் முகவரியை 48 மணி நேரத்தில் அப்டேட் செய்யவும் என்ற தகவலுடன் எஸ் எம் எஸ் வந்தால் அதனை உடனே டெலிட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
